2025 மே 17, சனிக்கிழமை

அரச காணிகளைப் பிடிப்பதை தடைசெய்ய முடிவு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஜூலை 25 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி பிரதேச சபைப் பிரிவில் அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் தனியார்கள் உரிமை கோறுவதை தடைசெய்வதற்கு, பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைமைகளான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோரது தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற போதே, மேற்படித் தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது.

ஓட்டமாவடி பிரசே சபை  பிரிவில் சட்டவிரோதமான முறையில் காடுகளை அழித்து, தனி நபர்கள் காணி விற்பனையில் ஈடுபடுவதாக, வன இலாகா அதிகாரியால், ஒருங்கினைப்புக் குழு கூட்டத்துக்குத் தெரியப்படுத்திதையடுத்தே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அரச காணிகளில் குடியிருப்போர், தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்தக் காணியை அவர்களுக்கு வழங்குவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீள் பரிசீலினை மேற்கொள்வார்கள் என்றும் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் தங்களது காணி என்று போலி ஆவணங்களை தயாரித்து, காணிக்கு உரிமை கோருபவர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .