2025 மே 17, சனிக்கிழமை

‘அரசாங்க வேலை வாய்ப்புகள் இல்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 23 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வருடாந்தம் பட்டம்பெற்று வெளியேறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு, அரசாங்க வேலை வாய்ப்புகள் இல்லாதிருப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி, ஹிழுறியா வித்தியாலயத்தில் 8 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறை கட்டட அடிக்கல் நடும் விழா, அதிபர் யாசீர் அரபாத் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று (23)  இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“நவீன யுகத்தில் வாழ்கின்ற மாணவர்கள் அதற்கேற்றாற் போல் தமது கல்வித்துறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், புதிய துறைகளைத் தெரிவுசெய்வதன் ஊடாக போட்டி மிகுந்த தொழிற்சந்தையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

“நாட்டில் பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்புகள் இல்லை. அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் பலருக்கு இன்னும் தீர்வில்லை.

“அரசாங்கம் நெருக்கடிகளுக்கு மத்தியில் இருப்பதால் அவர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்க முடியாதுள்ளது.  ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வெளியேறிக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொழில் வழங்கும் வாய்ப்பு – வசதி அரசாங்கத்திடம் இல்லை.

“இருப்பினும், பட்டதாரிகள் விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் பேசி வருகின்றோம். கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயம் சம்பந்தமாகவும், இருக்கின்ற அரசாங்க தொழில் வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிப்பது சம்பந்தமாகவும் ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .