எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரையம்பதி, காங்கேயனோடை பிரதேசத்தில் கல்வி எழுச்சியை ஏற்படுத்துவதற்காக காங்கேயனோடை அல் அக்ஷா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நடைபவனி, எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இப்பாடசாலையில், கல்விகற்ற அனைத்து பழைய மாணவர்களையும் ஒன்று சேர்ப்பதுடன், காங்கேயனோடை அல் அக்ஷா மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டையும் பௌதீக தேவையும் கருத்திற்கொண்டு, இந்த நடைபவனியை நடத்தவுள்ளதாக, இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பாடசாலை அதிபருமான எம்.ஐ.எம்.அப்பாஸ் நழீமி தெரிவித்தார்.
இது தொடர்பாக, விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, காங்கேயனோடை அல் அக்ஷா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில், நேற்று (15) மாலை நடைபெற்றது.
இதன்போது, நடைபவனிக்கான டி-சேர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், நடைபவனி தினத்தன்று, பரிசளிப்பு வைபவம், பழைய மாணவர்களின் மாணவர் மன்றம் என்பனவும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
30 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
4 hours ago