Kogilavani / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் வைத்து ஆசிரியரைத் தாக்கிய, மாணவன் ஒருவனின் தந்தையைத் தேடி வருவதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை, காத்தான்குடியிலுள்ள குறித்த பாடசாலையில் வைத்து, பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிக்காக தனது இல்லத்தினை நிர்மாணித்துக் கொண்டிருந்த எஸ்.ராகுலன் எனும் ஆசிரியர், அங்கு வந்த வெளிநபர் ஒருவரினால் தாக்குதலுக்கு இலக்காகினார்.
தாக்குதலுக்கான ஆசிரியர், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு, இல்ல நிர்மாண வேலைகளுக்கு, அங்கு கூடியிருந்த பிறிதொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தடையாக இருந்துள்ளனர். இதன் போது குறித்த ஆசிரியர் அந்த மாணவர்களை எச்சரித்துத் தள்ளி விட்டதில், மாணவர்கள் கீழே விழுந்துள்ளனர். அவர்களில் ஒரு மாணவன், தனது தந்தையிடம் தன்னை ஆசிரியர் தாக்கியதாகக் கூற, குறித்த தந்தை அங்குசென்று, ஆசிரியரைத் தாக்கியுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த ஆசிரியரினால் தான் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து அம்மாணவனும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
சந்தேக நபர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago