எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 23 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகஸ்தர்களின் வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாக்க, இன்று (23) தெரிவித்தார்.
புதிய இடமாற்றங்கள் அனைத்தும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கேற்ற வகையில், இடமாற்ற உத்தியோகஸ்தர்கள் விடுவிப்புச் செய்யப்பட வேண்டுமென திணைக்களங்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவரம் அடங்கிய சுற்றுநிரூபம், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிள் ஒரு நிலையத்தில் தொடர்ச்சியாக பல வருடங்களாகச் சேவையாற்றி வருகின்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணியாளர் சேவை, தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் சேவை ஆகியனவற்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
திணைக்களங்களில் காணப்படும் அனுமதிக்கப்பட்ட ஆளணியினருக்கு மேலதிகமான ஆளணியினர் கவனத்தில் கொள்ளப்பட்டு, இடமாற்றத்துக்கு உள்ளாக்கப்படுவர்.
எனினும் இவர்களுக்கான பதிலீடுகள் வழங்கப்படமாட்டதாது எனவும் அச்சுற்றுநிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், மத்திய குழு உறுப்பினர்களை இடமாற்றம் செய்வதாயின் தொழிற்சங்க செயலாளரின் சிபாரிசு கவனத்தில் கொள்ளப்படும்.
இது தொடர்பான விவரங்களையும் தொழிற்சங்கங்கள், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இடமாற்றத் தீர்மானங்களை அமைச்சு, திணைக்களங்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து செப்டெம்பர் 30ஆம் திகதி இடமாற்ற மேன்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், நவம்பர் 01ஆம் திகதி மேன் முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago