2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இனங்களிடையே குழப்பங்களை தூண்டுபவர்களுக்கு தூண்டில்

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 21 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இனமுரண்பாடுகளையும் இனங்களிடையேயான குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“ஓர் இனத்தின் மீது, காலியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பு என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

“இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக தயவுதாட்சண்யம் இன்றி விசாரணை நடத்தி, உரியவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு பிரதமர் ரணில்விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று, பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் தொடர்பிலும் வரவேற்கின்றோம்.

“வட, கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்ற கருத்தை நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்துகள் ஆரோக்கியமான இன ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடியவை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

“இனவன்முறைகளை ஏற்படுத்தி, இந்த நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முனையும் சக்திகளைக் கண்டறிந்து, அவர்கள்மீது கடுமையான நடவடிக்கையை, அரசாங்கம் எடுக்கவேண்டும்.

“இவ்வாறான இனவன்முறைகள் மேலும் தொடராவண்ணம் இருக்கும் வகையில், சகல சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து, அதற்கான பணியை முன்னெடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X