2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இரத்ததான முகாம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கொழும்பு பல்லைக்கழகத்தின் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து கொழும்பு பல்லைக்கழகத்தின் தமிழ் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பெருமளவான மாணவர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் சமூக செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இ.லவநீதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பில் இந்த நிகழ்வினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கொழும்பு பல்லைக்கழகத்தின் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவை திட்டத்தின் கீழ் தமிழ் பேசும் மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் தமது சங்கம் ஊடாக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X