2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் விருதுப் போட்டி

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் நடத்தப்பட்ட இவ்வாண்டுக்கான இளைஞர் விருதுப் போட்டி நேற்று சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்,மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட உத்தியோகத்தர் ஜே.கலாராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மாவட்டத்தில் கடமை புரியும் இளைஞர்,சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,அறிவிப்புத்துறை,பேச்சு,பரத நாட்டியம்,பாடல், குழு நடனம்,புத்தாக்க நடனம் போன்ற துறைகளில் போட்டிகள் இடம்பெற்றன.

இப்போட்டிகளில் தெரிவு செய்யப்படும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்கள், தேசிய போட்டியில் பங்குகெடுப்பதற்காக தெரிவுசெய்யப்படுவார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X