2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உணவில் பல்லி; ஹோட்டல் மூடப்பட்டது

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுக்குள் பல்லி காணப்பட்டதைத் தொடர்ந்து அக்ஹோட்டலை மூடியுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இது தொடர்பில்  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு திங்கட்கிழமை (27) முறைப்பாடு கிடைத்தது. 

இதனை அடுத்து, பொதுச் சுகாதாரப்  பரிசோதகர்கள் அக்ஹோட்டலில் சோதனை செய்ததுடன், விசாரணையும் மேற்கொண்டனர். இந்நிலையில், மேற்படி ஹோட்டலை மூடுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X