2025 மே 07, புதன்கிழமை

உதயதேவி ரயில் சேவையை காலை 07.30 க்கு ஈடுபடுத்துமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் உதயதேவி ரயில் சேவையை காலை 07.30 மணிக்கே ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள்; சங்கத்தின் தலைவர் வை.எம்.என்.எஸ்.பண்டாரவும் செயலாளர்; யூ.எல்.எம்.பைஸரும் கையொப்பமிட்டு, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா மற்றும் ரயில்வேத் திணைக்கள அத்தியட்சகருக்கும் கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இதுவரைகாலமும் மட்டக்களப்பிலிருந்து காலை 07.30 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட உதயதேவி ரயில், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான புதிய ரயில் சேவை நேர மாற்றத்தின்படி, காலை 06.10 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படுமென்று ரயில்வேத்; திணைக்கள துணை இயக்க அத்தியட்சகரினால் சுற்றுநிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நேர மாற்றத்தினால் பொத்துவில், பாணாமை, லகுகல, உகண, அம்பாறை, திருக்கோவில், அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து உதயதேவி ரயிலுக்குச்; செல்லும் பிரயாணிகள் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும். எனவே, இதனைக்  கருத்திற்;கொண்டு ஏற்கெனவே உள்ள நேரப்படி காலை 07.30 மணிக்கு உதயதேவி ரயில் சேவையை  ஈடுபடுத்துவதற்கு ஆவண செய்யவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X