Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
உரமானியம் பெறும் போரதீவுப்பற்று பிரதேச விவசாயிகள் தங்களின் பெயர் விபரங்களை உரிய கமநல அமைப்பு ஊடாக உரச் செயலகத்துக்கு இம்மாதத்தினுள் அனுப்பிவைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தின் 2015 – 2016ஆம் ஆண்டுக்கான பெரும்போகச் செய்கை தொடர்பான ஆரம்பக் கூட்டம், அப்பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயத்துக்கான நீர் விநியோகம், விதை நெல் மற்றும் உரமானிய விநியோகம், விவசாயிகளுக்கான காப்புறுதிகள், யானைகள் உள்ளிட்டவற்றினால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
மேலும், இவ்வருடம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் 17,116 ஏக்கரில் வேளாண்மை செய்கை பண்ணுதல், எதிர்வரும் 15.09.2015 அன்று வயல் வேலைகளை ஆரம்பித்தல், எதிர்வரும் 25.10.0215 அன்று விதைப்பு வேலைகள் ஆரம்பித்தல், இப்பகுதியிலுள்ள கால்நடைகள் அனைத்தும் மேய்ச்சல்தரைக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கொண்டு செல்லப்பட வேண்டும் ஆகியவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
வேளாண்மையில் ஏற்படும் பாரிய நோயாகக் காணப்படும் கபில நிறத்தத்தி நோய்க்கு விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே தடவையில் கிருமிநாசினிகளை விசிறுதல், நெல் அறுவடை செய்த உடனேயே விவசாயிகளிடமிருந்து நெல்லை நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்தல், வேளாண்மைகளை நாசம் செய்யும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வன ஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தல், விதை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவித்தல், போன்றவை தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இவ்வாறிருக்க, இப்பிரதேச்தில் 500 ஏக்கரில் உப உணவுப் பயிர்களான நிலக்கடலை, சோளன், கௌப்பி போன்றவற்றை மேற்கொள்ளுதல் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago