2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊடகத்தின் சுதந்திரமும் பேணப்படுதல் வேண்டும்: யோகேஸ்வரன்

Gavitha   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

'நாட்டின் சுதந்திரம்  பேணப்பட வேண்டும் என்றால், ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமும் பேணப்படுதல் வேண்டும். ஆனால், இந்நாட்டில் பல ஊடகவியலார்கள் கொலைச் செய்யப்பட்ட விடயத்தை ஆட்சியாளர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளனர்' என்று, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

'மக்களுக்காக யார் குரல் கொடுக்கின்றார்களோ அவர்களை காணாமல் ஆக்குவதும், கொலை செய்வதும் இந்த நாட்டின் வரலாறாக காணப்படுகிறது' என்றும் அவர் கூறினார்.

ஊடகவியாளலர் நிமலராஜன் கொலைசெய்யப்பட்டு 11ஆவது ஆண்டு நினைவஞ்சலி, இன்று (05) மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இலங்கையில் ஊடக அடக்குமுறை காரணமாக கடத்தப்பட்டு, கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் வரலாறாகவே காணப்படுகின்றது. இவர்கள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் ஆட்சியார்கள் மேற்கொள்ளவில்லை. தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் கூட  எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை' என்று அவர் கூறினார்.

18.05.1990 அன்று, ரிச்சட் டி சொய்சா என்ற ஊடகவியலாளர் கடத்தி கொலை செய்யப்பட்டது முதல்;, 2009 மார்ச் 06ஆம் திகதி சசி மதன் கொலைச்செய்யப்படும் வரை சுமார் 41 ஊடகவியலாளர்கள் எமது நாட்டில் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு முன்பு 3 ஊடகவியலாளர்கள் கொலைச்செய்யப்பட்டள்ளார்கள். 44 ஊடகவியலாளர்கள் கொலைச்செய்யப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்டுள்ளார்கள். ஆனால்,  இதுவரை நியாயமான முறையில் விசாரணைகள் நடைபெற்று, இதுவரை குற்றவாளிகள் கண்டுவிடிக்கப்படவில்லை.

ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில் 5 ஊடகவியலாளர்களும், சந்திரிகா பண்டாரநாயக குமாரத்துங்க காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 26 ஊடகவியலாளர்கள் கொலைச்செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கம், ஊடகவியலாளர்கள்  படுகொலை, காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X