Freelancer / 2022 ஜூன் 29 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (28) எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில், அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் எரிபொருள் நிலையத்திற்குள் குவிந்த காரணத்தினால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதன்போது பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, குறித்த இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எம்.செல்வராசா ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்து, விசேட ஒழுங்குபடுத்தலின் கீழ் எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்குமாக 6,600 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
43 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
53 minute ago