Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரைப் பிரதேசத்தில்;; சுமார் 20 அடி தூரம் கடல் அரிப்புக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்போது, கடற்கரையில் காணப்பட்டன தென்னை மரங்கள் விழுந்துள்ளதுடன், அங்குள்ள மீனவர் தங்குமிடக்கட்டடத்துக்கும் மீனவர் எரிபொருள் நிரப்பு நிலையக் கட்டடத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கூறினர்.
கடல் அரிப்புக் காரணமாக படகுகளை அங்கு நிறுத்த முடியாதுள்ளதாகவும் இதனால், ஏனைய இடங்களில் தமது படகுகளை கொண்டுசென்று நிறுத்த வேண்டியுள்ளதாகவும் மீனவர்கள் கூறினர்.
இந்தக் கடல் அரிப்பை பார்வையிட்ட காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், இது தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபனிடம் செவ்வாய்க்கிழமை கேட்டபோது, இது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பாகும். இருப்பினும், இது தொடர்ச்சியான கடல் அரிப்பு அல்ல. இது தொடர்பில் மீனவர்களோ, பொதுமக்களோ அச்சமடையத் தேவையில்லை' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago