Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் நகரப் பிரதேச செயலகப் பிரிவில் காணி வசதியின்றியுள்ள சுமார் 2,500 குடும்பங்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏறாவூர் நகரப் பிரதேச செயலகப் பிரிவில்; வாழும் மக்கள் தாம் குடியிருப்பதற்கு காணி இல்லாமை காரணமாக மிகச் சிரமத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் நிலங்களிலும் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சுமார் 2,500 குடும்பங்கள்; தங்களுக்குக் காணி தேவை என்று ஏறாவூர் நகரப் பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள். ஆயினும், அவர்களுக்கு காணி கிடைப்பதில் சிரமம் காணப்படுகின்றது.
இது சமூகப் பிரச்சினையாகவும் மனிதாபிமான நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது.
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுடன் இணைந்ததாக உள்ள ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் போதியளவு காணிகள் உள்ள அதேவேளை, அருகில் வாழும் இந்த மக்கள் காணி வசதியின்றி அந்தரிக்க விடப்பட்டிருப்பது மனிதாபிமான நெருக்கடியாகவும் பார்க்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, இது குறித்து உடனடியாக ஜனாதிபதியும் பிரதமரும்; கவனத்தில் எடுத்து இந்த மக்களின் கஷ்டத்தைப் போக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago