2025 மே 10, சனிக்கிழமை

ஏழு மாத சிசு மரணம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

ஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த ஷாஹீர் ஹுஸைன், பாத்திமா நிஃலாஹ்  ஆகியோர்களின் ஏழு மாத சிசு, இன்று (12) உயிரிழந்துள்ளது.

ஓரிரு நாள்களாக காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி ஷஸாட் அஹமட் எனும் இந்தச் சிசு, பெருநாள் தினமான இன்று உயிரிழந்துள்ளது.

சிசுவின் ஜனாஸாவைப் பார்வையிட ஓட்டமாவடி,  வாழைச்சேனை, மீராவோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாஸா, மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் இன்று காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X