2025 மே 17, சனிக்கிழமை

ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகள் பங்களிப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜூலை 23 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மூடப்படும் நிலையிலுள்ள பாடசாலைகளின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு, புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் சமூகத்தின் ஆதரவுச் செயற்பாட்டின் மற்றொரு செயற்பாடு, நேற்று (22) நடைபெற்றது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நரிப்புல்த்தோட்டம், மகிழவட்டவான் கிராமங்களில் இரண்டாவது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த  தாய்மார்களுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம்  நான்கு குடுப்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற மண்முனை மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், கௌரவ அதிதிகளாக  பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், உதவிக்கல்விப் பணிப்பாளர் .க.ஹரிகரராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, உதவிகளை வழங்கிவைத்தனர்.

புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதரவில், கிராம அபிவிருத்தி என்ற  தலைப்பில் மண்முனை மேற்கு பிதேச செயலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி, பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு சதவீதத்தை அதிகரிக்கும்  நோக்கில், இச்செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .