Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதை பொருட்களுடன் மூன்று நபர்களும் சந்தேகத்தின் பேரில் இருவருமாக ஐவர் காத்தான்குடி பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (19) இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி, பகுதிகளில் வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எம். ஐ. ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.நந்தன தலைமையிலான பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2.970 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ரீ. எல் ஜவ்பர்கான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .