Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள், கறுப்புப் பட்டியணிந்து ஆர்ப்பாட்டத்தில் நேற்று (13) ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு முன்னால் ஒன்றுகூடிய மாணவர்கள், தமது வாய்களைக் கறுப்புத் துணிகளால் கட்டிக்கொண்டு, பதாதைகளைத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'கேப்பாப்புலவு மக்களின் போராட்டம், 14ஆவது நாளாக தொடரும் நிலையில், அங்கு குழந்தைகள் முதியவர்கள், பெண்கள் எனப் பலரும் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களான நாங்கள், பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் ஈடுபடுகின்றோம்.
"கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் முடியும் வரை, அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்போம். அவர்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென, இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago