Suganthini Ratnam / 2017 ஜனவரி 26 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அப்பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.
வந்தாறுமூலைப் பேரவைக் கட்டடத்தில் இன்று (26) நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 3,200 மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்க வேண்டியுள்ளது. விரும்பியவர்கள் வெளி இடங்களில் தங்கமுடியும்.
மாணவர்களுக்கு வெளி இடங்களில் விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வருடாந்தம் 30 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு இணக்கம்; தெரிவித்துள்ளது. இந்த நிதி மூலம் விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளாகவும் அவர் கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் தங்களுக்கு விடுதி வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரி வந்தாறுமூலையிலுள்ள நிர்வாகக் கட்டடத்தில் இரவு, பகலாக தங்கியிருந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து, கடந்த 20ஆம் திகதி முதல் அப்பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது இம்மாணவர்கள் பகிஷ்கரிப்பைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025