Niroshini / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாகலிங்கம் திரவியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய,அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்.
இந் நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு விருப்பு வாக்கில் அடுத்தபடியாக இருந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாகலிங்கம் திரவியம் முதலாவது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago