2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 7 முதியோர் இல்லங்கள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் 07 முதியோர் இல்லங்கள் இருப்பதாக மாகாண சமூகசேவைகள் திணைக்களப்  பணிப்பாளர்; எம்.மணிவண்ணன்  இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 04 முதியோர் இல்லங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 02 முதியோர் இல்லங்களும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு  முதியோர் இல்லமும் உள்ளன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் பிரதேச ரீதியாக 45 முதியோர் சங்கங்களும் மாவட்ட ரீதியாக 03 முதியோர்; சங்கங்களும் மாகாண ரீதியாக ஒரு முதியோர்; சங்கமும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த மாகாணத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட 10 சதவீதமான முதியோர் உள்ளனர். கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் மாதாந்தம் இவர்களுக்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய்வரை கொடுப்பனவு வழங்கப்படுகின்றன. அதேபோன்று, மத்திய அரசாங்கத்தினால் 70 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X