Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கல்வி பயிலும் பாடசாலை மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலயம் மற்றும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை ஆகியவற்றில் தரம் 6இல் கல்வி பயிலும் 75 மாணவிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, வாழைச்சேனை ஆயிஷா பாலிகா வித்தியாலயத்தில், இன்று (30) நடைபெற்றது.
வளர்ந்து வரும் பெண் பிள்ளைகளுக்கு 35 வயதாகும் போது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தாக்கம் ஏற்படும். அதனை ஆரம்பத்திலே தடுக்கும் நோக்கில் மாணவிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தத் தடுப்பூசி ஏற்றும் பணியில் பொதுச் சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
24 minute ago
2 hours ago