Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலையில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(14) காலை நடைபெற்றது.
மிகவும் பின்தங்கிய பகுதியான பலாச்சோலை, மாவடிமுன்மாரி உட்பட பல பாலர் பாடசாலைகளுக்கே, இந்தக் கற்றல் உபகரணங்கள் இராசமாணிக்கம் சமூக அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டன.
பின்தங்கிய பகுதி மாணவர்களின் கல்வியை இலக்காகக்கொண்டு இந்தச் செயற்றிட்டத்தை, பாலர் பாடசாலை முதல் உயர்தரம் வரையில் இராசமாணிக்கம் சமூக மேம்பாட்டு அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவ்வமைப்பின் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய, வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, அனைவரும் கைகோர்க்க முன்வரவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
22 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
4 hours ago