2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கலாசார விழிப்புணர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

கலாசார விழிப்புணர்வை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இளைஞர்களே, விசுவாசிகளே விழுத்தெழுங்கள், கலாசார சீரழிவு உள்ளிட்டவற்றுக்கான விழிப்புணர்வை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அணி திரளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

'நாம் விசுவாசிகள்' (ஈமான்தாரிகள்) என்ற அமைப்பு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X