2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்,  கனகராசா சரவணன் 

 

மட்டக்களப்பு - ஓட்டுமாவடி கொண்டையன்கேணி பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து, கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலத்தை, வாழைச்சேனைப் பொலிஸார், நேற்று (11) காலை மீட்டுள்ளனர்.

பதுரியா மீனவர் சங்க வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய  உசனார் ராஹிலா என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

குறித்த பெண் சம்பவ தினமான சனிக்கிழமை இரவு காணாமல் போன நிலையில், தலையில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளர்.

பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அப்பெண்ணின் உறவினர் உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X