Princiya Dixci / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை எனும் இடத்தில் பெரும்பான்மையின மக்களைத் திட்டமிட்டு குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து குறித்த இடத்துக்கு இன்று (21) விரைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பொதுமக்களும், தமது கண்டனத்தைத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது “காராமுனை எமது பிரதேசம்”, “இது மட்டக்களப்பு மண்” மற்றும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” உள்ளிட்ட பல வசகங்களை எழுப்பியவாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், தமிழ், மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
14 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
54 minute ago