எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 மே 13 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு காத்தான்குடியில், தொகை மதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தால், 2021ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு, வீட்டுவசதி மதிப்பீடு தொடர்பாக, கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் வரைபடங்களின் உண்மைத்தன்மையைப் பரீட்சித்தல் மற்றும் தொகை மதிப்புக்கண்டங்களை வேறுபடுத்துவதற்கான அறிவுறுத்தல் செயலமர்வொன்று, காத்தான்குடி பிரதேச செயலகத்தில், இன்று (13) இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு இச் செயலமர்வு இடம்பெற்றிருந்தது.
இதில், காத்தான்குடி பிரதேச செயலக புள்ளிவிவரவியல் உத்தியோகத்தர் நவரட்ணம் நவனீதன், 2021ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் வீட்டு வசதி மதிப்பீடு தொடர்பாக, கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் வரைபடங்களின் உண்மைத்தன்மையைப் பரீட்சித்தல், தொகை மதிப்புக்கண்டங்களை வேறுபடுத்துவதற்கான அறிவுறுத்தல் விரிவுரையை நிகழ்த்தினார்.
21 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
4 hours ago