Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம்
ஜனாதிபதி செயலகமும் பாதுகாப்பு அமைச்சின் உள்ளக, நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து செயற்படுத்தி வருகின்ற கிராம பாதுகாப்பு குழுக்கூட்டம், நேற்று (15) மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிராம பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் ஆரம்பக் கூட்டம், நேற்று காலை, மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில், மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்க, ஜனாதிபதி செயலகத்தின் கிராம பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டீ.கமல் பத்மசிஸ்ரீ, விசேட அதிதியாக கலந்து கொண்டு இச்செயலமர்வை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
இந்த கிராம பாதுகாப்புக் குழுக்கூட்டமானது, மக்களுக்கு கிராம மட்டத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவையை உணர்ந்து கொண்ட ஜனாதிபதின் எண்ணக்கருவில் உதயமானது என்றும் இதை, மாவட்டத்தில் சகல கிராமங்களிலும் முன்னெடுக்க வேண்டிய தேவை கிராம சேவை உத்தியோகத்தர்கள் மத்தியிலுள்ளது என்றும் கூறினார்.
கிராம பாதுகாப்பு எனும் போது, மக்களுக்கான பாதுகாப்பு, யானைத்தாக்கம், டெங்கு பாதுகாப்பு, மது பாவனைக்கு அடிமையாகாமல் பாதுகாத்தல், பொருளாதாரத்தை நிலைபேறானதாக பாதுகாத்தல் என பல்வகையான விடயங்களையும் உள்ளடக்கியதாக பாதுகாப்புக்குழு, சுபீட்சத்தையும் கிராம மட்டத்தில் உருவாக்கும் நோக்குடன் செயற்படுத்தப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்க, நாட்டில் இயங்குகின்ற முப்படைகள், பொலிஸ் ஆகியோருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago