2025 மே 10, சனிக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 06 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணாணை, மியான்குளம் பகுதியில் 3,100 கிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவர், இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவ்விரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாபாரத்துக்காக  கிளிநொச்சியில் இருந்து மட்டக்களப்புக்கு மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் வந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டு, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக  வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய வியாபாரிகள் வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X