2025 மே 17, சனிக்கிழமை

கொங்கிறீட் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பில், மழைகாலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில், கொங்கிறீட் கால்வாய்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்படும் பகுதிகளைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, கல்லடி, டச்பார் வீதியூடாக கல்லடி பாலத்துக்கு வெள்ளநீர் வழிந்தோடும் கால்வாயை, கொங்கிறீட் கால்வாயாக அமைக்கும் நடவடிக்கைகள், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் தலைமையில், இன்று (26) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 75இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு மாநகர சபையால், இந்தக் கால்வாய் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், பிரதேச கிராம சேவையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறான, கால்வாய்கள் அமைக்கப்படுவதன் ஊடாக, எதிர்காலத்தில் வெள்ளநீர் வழிந்தோடும் நிலைமை காணப்படுவதால், வெள்ள அபாயங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .