Freelancer / 2022 ஜூலை 03 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோதுமை மாவை ஏற்றிவந்த லொறி ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் வைத்தே இந்த விபத்துச் சம்பவம் இன்று (3) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் போது சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு விபத்துக்குள்ளான லொறியில் பயணம் செய்த சாரதியும் நடத்துனரும் காயங்களின்றி தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago