2025 மே 07, புதன்கிழமை

சீ-பிளேன் வருகையால் மட்டு. வாவிக்கு பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்

சீ-பிளேன் வருகையால் மட்டக்களப்பு வாவியும் அதன் சுற்றுப்புறங்களும் வாவி மீனவர்களின் ஜீவனோபாயமும் பாதிக்கப்படுவதாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் கலாநிதி ஓ.கே.குணநாதன் தெரிவித்தார்.

மீனவர்களும் சிறுபயிர்ச் செய்கையாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (06) மாலை நடைபெற்றது. இதன்போதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'தினமும் நடைபெறுகின்ற இச்சேவையின்போது, சீ-பிளேனிலிருந்து வரும் சத்தம் காரணமாக ஒலி மாசடைதல், எரிபொருள் நாற்றத்தினால் வளி மாசடைதல், எரிபொருள் கழிவு நீரில் கலப்பதனால் வாவி மாசடைதல் என்பன ஏற்படுகின்றன.

சீ-பிளேனின் அதிர்வு மற்றும் கழிவு எண்ணெய்யினால்; வாவியிலுள்ள நண்டு, இறால் உள்ளிட்ட உயிரினங்களும் நீர்த்தாவரங்களும் அழியும் அபாயமுள்ளது. அத்துடன், அன்றாட ஜீவனோபாயத்துக்காக மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் சீ -பிளேன் வரும் நேரத்தில் வெளியேற்றப்படுகின்றனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X