Suganthini Ratnam / 2017 மார்ச் 06 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கேஎ.ல்.ரி.யுதாஜித்
சிறுபோக விவசாயச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (6) நடைபெற்ற விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வெல்லாவெளியிலுள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறும்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும்.
மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் எதிர்வரும்; 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அப்பிரதேச செயலகத்தில் நடைபெறும்.
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம், கித்துள், வெலிக்காகண்டி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு அப்பிரதேச செயலகத்தில் நடைபெறும்.
கோரளைப்பற்று வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கட்டுமுறிவு, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வாகரைப் பிரதேச செயலகத்தில் நடைபெறும்.
கோரளைப்பற்றுத் தெற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு கிரானிலுள்ள றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களுக்கு குறிப்பிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபடும்; சகல விவசாயிகளும் குத்தகைக்காரர்களும், காணிச் சொந்தக்காரர்களும் சமூகமளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago