Suganthini Ratnam / 2017 ஜனவரி 26 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஸ்.எம்.நூர்தீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்;தனின் பிணை மனுவை எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிக்கு விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனக்குப் பிணை வழங்குமாறு கோரியும் தனது அடிப்படை மனித உரிமை மீறல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியும் எனவே, தனது வழக்கை உடனடியாக விசாரணை செய்யுமாறு கோரியும் அவரது சட்டத்தரணிகள்; மூலமாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த மனு, கடந்த செவ்வாய்க்கிழமை (24) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
இதன்போதே, இந்த மனுவை மே மாதம் 30ஆம் திகதி விசாரணை செய்வதற்கு நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
இவரது பிணை கோரிய மனு மீதான விசாரணை மட்டக்களப்பு மேல் முறையிட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இவரது பிணை கோரிய மனு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025