2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘சந்திரகாந்தனை விமர்சிப்பதற்கு எந்த அரசியல்வாதிக்கும் தகுதியில்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மேற்கொண்ட அபிவிருத்தியைக் குறை கூற, மட்டக்களப்பில் எந்த அரசியல்வாதிக்கும் தகுதி இல்லையென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாநகர சபையின் 7ஆவது சபை அமர்வு, நேற்று (14)  நடைபெற்ற போது, தனது உரையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மைக்காலமாகத் தமது கட்சியைப் பற்றியும் கட்சியின் தலைவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியைப் பற்றியும் சில தரப்பினர் விமர்சித்து வருவது கவலைக்குரிய விடயமாகுமென்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த மாநகரத்தைப் பொறுத்த வரையில், இம்மாநகரத்தின் முதல் முதல்வராக இருந்த சொல்லின் செல்வன் இராஜதுரைக்குப் பின்னர் தமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் முயற்சியினாலேயே அதிக அபிவிருத்தியை இந்த மாநகரம் கண்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே, தமது தலைவரை இம்மாவட்டத்தின் மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் வெளிப்பாடுதான் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமது கட்சிக்கு மக்கள் 43,000க்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி மாவட்டத்தில் 36 ஆசனங்களை தேர்ந்தெடுத்துள்ளனர என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, முடியுமாக இருந்தால் தலைவரை விமர்சிப்பவர்கள் இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கும், மக்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்து விட்டு, விமர்சனங்களை முன்வைக்கட்டுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X