2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிரமதானப்பணியும் மரநடுகை நிகழ்வும்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மார்ச் 21 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக காடுகள் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட வனப் பரிபாலன திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிரமதானப் பணியும் மரநடுகை நிகழ்வும், மட்டக்களப்பு, கல்லடியில் இன்று (21) நடைபெற்றது.

மார்ச் 21ஆம் திகதி உலக காடுகள் தினம் பல பாகங்களிலும் அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந்நிகழ்வு, கல்லடி டச்பார் பிரதேசத்தில் அமைந்துள்ள வன பரிபாலன திணைக்களத்தின் கடற்கரை பூங்கா வளாகத்தில், மட்டக்களப்பு வலய வன அதிகாரி எஸ்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடற்கரைக்குப் பொழுதுபோக்குக்காக வருகைதருவோரால் அங்கு கைவிட்டுச் செல்லப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள், தகர பேணிகள் உள்ளிட்ட குப்பைகளைச் சிரமதானம் செய்ததுடன், அவ்வளாகத்தில் நிழல் மரக் கன்றுகளும் நடப்பட்டன.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரி கேமந் விஜயரத்ன உதவி வன அதிகாரிகளான அஜித் குரே, எம்.ஏ.ஜாயா, மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பயிற்சி முகாம் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.எம்.எஸ்.பிரேம்லால் உள்ளிட்ட வன பரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X