Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
அரபு நாடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சீசா இயந்திரத்தினுள் கஞ்சாவை வைத்து நுகர்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் மூவர், காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என, காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.மெண்டிஸின் பணிப்புரையின் பேரில், பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், காங்கேயனோடை பிரதேசத்தில், இன்று (14) அதிகாலை 1 மணியளவில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து, கஞ்சா, கேரளாக் கஞ்சா, சீசா தூள், வெளிநாட்டுச் சிகரெட் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சீசா இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
டுபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில், குறித்த சீசா பாவனையில் உள்ளது. மேற்படி இயந்திரத்தினுள் சீசாத் தூளுக்குப் பதிலாக கஞ்சாவை வைத்து குறித்த இளைஞர்கள் நுகர்ந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைதான குறித்த இளைஞர்களிடமிருந்து, ஜோர்தான் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை சீசா பவுடரும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இளைஞர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த காத்தான்குடிப் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago