2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சேவையிலிருந்து ஓய்வு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் கே.எம்.யு.எச்.அக்பரைப் பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம், மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (14) நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எம்.ரி.ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர்களான பாலித அபேகுரத்ன, ஏ.மோகன் உட்பட சிறைச்சாலை நலன்புரிச் சங்க உத்தியோகத்தர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஓய்வு பெற்றுச் செல்லும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகரைப் பாராட்டி, அவரின் சேவையைக் கௌரவித்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கினர்.

1985 - 2019 வரையான 34 வருட ஸ்ரீ லங்கா சிறைச்சாலை சேவையிலிருந்து  அக்பர் ஓய்வு பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தகக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X