Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஒற்றுமையாக நின்று வாக்களித்ததால்தான்; முன்னாள் ஜனாதிபதி தோற்கடிக்கப்பட்டு ஜனாதிபதி மையித்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு வடக்கு கிழக்கு மக்களின் பங்கே அதிகம்'; என முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
துறைநீலவணை மக்களை வியாழக்கிழமை சந்தித்தபோதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடரந்;தும் உரையாற்றிய அவர்,
'சகல அரசியல் கட்சிகளும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு வாக்களிப்பதற்கு முன்னர் நிபந்தனையுடன் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தலைவர் சம்மந்தன் தெரிவித்திருந்தார.; இன்று வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளது.
பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதாவது என்னோடு தோளோடு தோள்நின்று உழகை;கவேண்டும். துறைநீலாவணைக் கிராமத்துக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை என பலர் என்னிடம் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்துக்கு 24 மணித்தியாலமும் நீரை பெற்றுகொடுப்பதற்கான வசதிகளை வெகுவிரைவில் ஏற்படுத்தி தருவேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago