Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது.
கடந்த ஜுலை 18ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்குநோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதுடன், இவ்வாண்டில் மொத்தமாக 901 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் எமது மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றமை தரவுகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
“டெங்கு நோயின் தாக்கத்தை உணர்ந்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன் , வீடுகளில் நீர் தேங்கியிருக்கும் இடங்களை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுத்து, எமது சுற்றுப்புற சூழலை சுகாதார முறையில் பேணுவது எமது கடமையாகும்.
“பெறுமதியான மனித உயிரை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றாய் செயற்பட்டு, எமது நாட்டில் இருந்து டெங்குவை ஒழிப்பதற்கு ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என்றும் அவர் அறிக்கையிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
45 minute ago
3 hours ago