Suganthini Ratnam / 2017 ஜனவரி 26 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகரசபைப் பிரிவில் திண்மக்கழிவுகளைத் தரம் பிரிக்கும் நடவடிக்கை இன்று (26) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நகரசபைச் செயலாளர் எஸ்.எம்.ஸபி தெரிவித்தார்.
வீடுகள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிலையங்கள் என்பவற்றிலிருந்து திண்மக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. காத்தான்குடியில் நாள் ஒன்றுக்கு 23 மெற்றிக்தொன் தொடக்கம் 25 மெற்றிக்தொன்வரை திண்மக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
குறுகிய காலத்தில் உக்கக்கூடிய கழிவுகள், நீண்டகாலத்தில் உக்கக்கூடிய கழிவுகள், மீள் சுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் என்று மூன்று வகைகளாக இக்கழிவுகளைத்; தரம் பிரித்துச் சேகரிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அறிவூட்டும் வேலைத்திட்டம், காத்தான்குடி நகரசபைப் பிரிவில் காத்தான்குடிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் நகரசபை ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025