2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தென்னை மரத்தில் ஏறிய நபர் விழுந்து பலி

Niroshini   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சபேசன்

களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில்  குடும்பஸ்தர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறியபோது  தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

துறைநீலாவணை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான இ.சிவானந்தராசாஎ (வயது 51) என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று புதன்கிழமைதேங்காய் பறிப்பதற்கு தென்னை மரத்தில் ஏறிய போது தவறி விழுந்துள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான நபர்  கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X