Princiya Dixci / 2021 மார்ச் 31 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123ஆவது ஜனன தின நிகழ்வுகள், மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் உள்ள அன்னாரது சிலையருகில் இன்று (31) நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி, மௌன அஞ்சலிகளும் செலுத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து கட்சித் தலைவரால் தந்தை செல்வாவின் ஜனன தின சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான பொன்.செல்வராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago