2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தியாகிகள் ஞாபகார்த்த பேரவை அங்குரார்ப்பணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூரில் தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக, அப்பேரவையின் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

ஏறாவூரிலுள்ள பல கிராமங்களில் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி, 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதன் 29ஆவது நினைவுப் பிரார்த்தனை நிகழ்வை அனுஷ்டிக்கும் முகமாக இந்தப் புதிய பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஞாபகார்த்தப் பேரவையை தொடங்கியிருப்பதன் நோக்கம் ஆயுத வன்முறைகளால் படுகொலை செய்யப்பட்ட, அங்கவீனமடைந்த, பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களின் விவரங்களைச் சேகரித்து, அவற்றை சரித்திர ஆவணமாகத் தொகுப்பதும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுவதுமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தியாகிகள் தினத்தை வருடாந்தம் அனுஷ்டிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மனவடுக்களைக் குணப்படுத்துவதும் அவர்களது நலனோம்பு விடயங்களை முன்னெடுப்பதும் இன்னபிற சமூகநல செயற்பாடுகளின் மூலம் இன ஐக்கியத்தை வளர்ப்பதும் சிறப்பு நோக்கங்களாக உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1985ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்கள், உயிர், உடமை இழப்புக்களையும் இடப்பெயர்வுகளையும் இன்னபிற பாதிப்புக்களையும் எதிரகொண்டு வந்துள்ள போதிலும் அந்தப் பாதிப்புகளின் விவரங்கள் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் அந்தக் குறைபாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரவையின் மூலம் எதிர்காலத்தில் நிவர்த்திக்கப்டும் என்றும் அப்துல் லத்தீப் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X