Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - ஏறாவூர் நகர சபையால் சேகரிக்கப்பட்டு, வாவியோரம் கொட்டப்படுகின்ற திண்மக்கழிவுகளிலிருந்து வெளியாகும் துர்நாற்றத்தைக் கட்டுப்படுதுவதற்கு, இரசாயனத் திரவம் பயன்படுத்துவது வெற்றியளித்துள்ளதாக, ஏறாவூர் நகர சபையின் மேயர் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
இரசாயனத் திரவப் பயன்பாட்டையடுத்து, குப்பைகளிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் 65 சதவீதம் கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபை ஆதிக்க எல்லைக்குள் வீடுகள், சந்தைகள், வீதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், கடந்த பல வருடகாலமாக வாவியோரம் கொட்டப்படுகின்றன.
இதனால் வாவியிலுள்ள மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மாத்திரமின்றி அயற்பிரதேசத்திலுள்ள பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர்.
இந்நிலையில், நகர சபையால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025