ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

“தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கில் கவர்ச்சிக்காக வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் தூண்ட வேண்டாம்” என, தமது அமைப்பு வேட்பாளர்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுப்பதாக, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரும் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித் தெரிவித்தார்.
ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை என்பனவற்றின் உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல், எறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் இன்று (17) நடைபெற்றது.
மேற்படி சம்மேளனம் மற்றும் ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபை ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், 'அபேட்சகர்களுக்கு அழகிய முன்மாதிரியான வழிகாட்டல்' எனும் தொனிப்பொருளில், இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அப்துல் வாஜித், “நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலப் பிரசாரத்தின்போது எதிர்த்தரப்பு அபேட்சகர்களை எவ்வாறேனும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வீண் விரயம் செய்தல், பொய், புறம், அபாண்டம், இட்டுக் கட்டுதல், சமூகக் குழப்பங்களை ஏற்படுத்துதல், சக சமூகத்தாரிடையே இன விரோத செயற்பாடுகளைத் தூண்டுதல் என்பனவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
“கனவான் அரசியல்வாதிகளாகவும் ஜனநாயகத்தை மதிக்கும் முன்மாதிரி அரசியல்வாதிகளாகவும் புதிய உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் நடந்து கொள்வது காலத்தின் தேவையாக இருக்கும்” என்றார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago