2025 மே 14, புதன்கிழமை

நீடித்து நிலைக்கும் வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தனும்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நீடித்து நிலைக்கக்கூடிய வாழ்வாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார்.

காத்தான்குடியிலுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான கூட்டம், வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிச்சங்க கட்டடத்தில்  வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற  மக்களை  இனங்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வாழ்வாதார திட்டங்களை அடையாளப்படுத்தும்போது சரியான திட்டங்களை அடையாளப்படுத்த வேண்டும். அத்திட்டங்களின் மூலம் பயனாளிகள் நன்மை அடையக்கூடியதாக இருக்க வேண்டும்.  உரியவர்களையும் அவர்களுக்கான சரியான தொழிலையும் அடையாளப்படுத்தி வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும்' என்றார்.

'மேலும், நீடித்து நிலைக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு செய்யக்கூடிய வாழ்வாதாரத் திட்டங்களை அடையாளப்படுத்தி அந்த திட்டங்களுக்காக நிதியை செலவு செய்ய வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

'தற்போது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வாழ்வாதாரத் தி;ட்டத்துக்காக 78.4 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி குறித்த சில மாவட்டங்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடமென்பதினால், வறுமையிலிருந்து மக்களை மீட்டு அவர்;களுக்கு வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி அவர்களின் தொழில்களை மேம்படுத்துவதற்காக நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X