2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நான்கு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக  வைத்திருந்த 4 பேருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில்  வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ரவிகரன் தெரிவித்தார்.

நகரைச் சுத்தம் செய்தலும், நுளம்புகளிலிருந்து பாதுகாத்தலும் தொடர்பான சுகாதார வேலைத்திட்டம் களுவாஞ்சிக்குடி நகரில்  புதன்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும், தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X