2025 மே 07, புதன்கிழமை

நீர்க்காகம் சிறப்பு கண்காட்சி ஒத்திகை நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம். ஹனீபா

இராணுவத்தினரின் நீர்க்காகம் சிறப்பு கண்காட்சி ஒத்திகை நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விசேட முகாமில் நடைபெற்றது.

இலங்கை இராணுவத்தின் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள்,கடற்படை அதிகாரிகள்,இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

எட்டு நாடுகள் கலந்துகொண்ட இந்த பயிற்சி கண்காட்சி ஒத்திகை நிகழ்வில் 58 வெளிநாட்டு படையினருடன் இலங்கை படையினரும் இணைந்திருந்தனர்.

இதன்போது அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமினை முப்படையும் இணைந்து தாக்குதல் நடத்தி கைப்பற்றும் வகையிலான ஒத்தினை நிகழ்வு நடைபெற்றது.

மேலும், விமானப்படை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் கடற்படையின் டோரா படகுகள் தரையிறக்கம் தாக்குதலையும் நடத்தியது.

அத்துடன், எம் 17 ஹெலிகொப்டர் மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர்களும் தாக்குதல் நடவடிக்கையில் ஒத்திகைகளை மேற்கொண்டது.

இறுதியில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பயிற்சிகளை பூர்த்தி செய்த வெளிநாட்டு படையினருக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X